காவிரி நதிநீர் வழக்கில் உச்ச‍நீதிமன்றத்தின் அதிர வைக்கும் தீர்ப்பு

அதிர்ச்சியில் தமிழகம் – காவிரி நதிநீர் வழக்கில் உச்ச‍நீதிமன்றத்தின் அதிர வைக்கும் தீர்ப்பு

அதிர்ச்சியில் தமிழகம் – காவிரி நதிநீர் வழக்கில் உச்ச‍நீதிமன்றத்தின் அதிர வைக்கும் தீர்ப்பு
நீண்ட காலமாக தமிழகம், கர்நாடகா இடையே தொடரும் காவிரி நதி நீர் பங்கீட்டு
வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்து க்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.
கடந்த 2007-ல் காவிரி நடுவர் மன்றம், தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளையில், கேரளாவுக்கு 30 டிஎம்சி புது ச்சேரிக்கு 7 டிஎம் சி என்ற நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை எனவும் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், காவிரி நதி நீரில் உரிமை கொண்டாட எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்துக்கு ம் உரிமை இல்லை எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி வழக்கில் மேல்முறையீடு செய்யமுடியாது எனவும் உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு?
எண் மாநிலம் நீரின் அளவு
1 கர்நாடகா 284.75 டிஎம்சி
2 தமிழ்நாடு 404.25 டிஎம்சி
3 கேரளா 30 டிஎம்சி
4 புதுச்சேரி 7 டிஎம்சி
 
தமிழகத்துக்கு தண்ணீர் குறைப்பு:
எற்கெனவே நடுவர் மன்ற வழங்கிய அளவில் இருந்து தற்போது தமிழகத்துக்கு வழங்கப்படக் கூடிய தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்துக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது என அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன் கூறினார். இத்தீர்ப்பின் மூலம் தமிழகத்துக்கு இனி காவிரியில் இருந்து மொத்தம் கிடைக்கக் கூடிய நீர் 404.25 டிஎம்சி என்ற அளவில் இருக்கும். முன்னதாக இது 419 டிஎம்சி என்ற அளவில் இருந்தது.
கர்நாடகாவுக்கு ஏன் கூடுதல் தண்ணீர்?
தமிழகத்துக்கு தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகா வுக்கு ஏன் கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் கூறும்போது, “பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள தை கருத்தில் கொண்டும் கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகளின் தேவைக்கு கூடுதல் நீர் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டும் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கர்நாடக வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், முதல்வர் சித்தராமையாவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

Comments

Popular Posts